சென்னைக்கு 2000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக சரக்கு ரயிலில் பயணம்

X
Thanjavur King 24x7 |10 Dec 2025 7:36 PM ISTசரக்கு ரயிலில் 2000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு 42 வேகன்களில் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர், டிச.10- தஞ்சையில் இருந்து சென்னைக்கு 2000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 2000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு 42 வேகன்களில் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story
