திருச்செங்கோடு புது புளியம்பட்டியில் விவசாயி இடம் 20000 லஞ்சம் கேட்ட விஏஓ கிராம உதவியாளர் அவரது கணவர் என மூன்று பேர் கைது

திருச்செங்கோடு புது புளியம்பட்டியில் விவசாயி இடம் 20000 லஞ்சம் கேட்ட விஏஓ கிராம உதவியாளர் அவரது கணவர் என மூன்று பேர் கைது
X
திருச்செங்கோடு அருகே புது புளியம்பட்டி கிராமத்தில் அனுமதி இன்றி பனைமரம்வெட்டிய விவசாயி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 20 ஆயிரம் லஞ்சமாக பெற முயற்சித்த போது விவசாயி கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஏஓ கிராம உதவியாளர்அவரது கணவர் என மூன்று பேரை கைது செய்தனர்
திருச்செங்கோடு புதுப்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)இவர் தனது நிலக்கரியே இருந்த பனை மரங்களை வெட்டியில் தொடர்பாக இவர் மீது வழக்குப் பதியாமல் இருக்கபுதுப்புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் ரூபாய் நாற்பதாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.முதல் கட்டமாக ரூ.20,000 கொடுத்த விவசாயி அடுத்த கட்டமாக பணம் கொடுக்க முடியாமல் தடுமாறிய போது கட்டாயப்படுத்தி விஏஓ குணசேகரன் கேட்டதாக தெரிகிறது இதனை அடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் காவல் ஆய்வாளர்பிரபுவிடம் இது குறித்து புகார் தெரிவித்தார் விவசாயி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயிகள் கொடுத்து அனுப்பிய போது கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் தான் வெளியில் இருப்பதாகவும் சி ஹெச் பி காலனி உள்ள கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டில் சென்று கொடுத்து விடும்படி கூறியதாக கூறப்படுகிறது.இதனை அடுத்துதிருச்செங்கோடு சிஎச் பி காலனி கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டுக்கு வந்த விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் இருபதாயிரத்தைதேவியிடம் கொடுக்க சென்றபோது தனது கணவர் விஜயகுமார் அருகில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருப்பதாகவும் அவரிடம் கொடுத்து விடும் படியும் கூறியுள்ளார் அதன்படிகிராம உதவியாளர் தேவியின் கணவர் விஜயகுமாரிடம்விவசாயி விவசாயம் தடவிய நோட்டுகளை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் சம்பவத்தில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் பிரபு கிராம உதவியாளர் தேவி அவரது கணவர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து அழைத்து வந்து திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story