கடந்த 2011 ஆம் ஆண்டு சுருளி அருவியில் நடைபெற்ற இரட்டைப் படுகொலை சம்பவம் குறித்து புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி
தேனியில் எழில் கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு சுருளி அருவியில் நடைபெற்ற இரட்டைப் படுகொலை சம்பவம் குறித்து புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது கொலை குற்றவாளிக்கு தீர்ப்பு கிடைக்க போராடிய நபர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது தேனி மாவட்டம் சுருளி அருகில் கடந்த 2011 ஆம் ஆண்டு காதல் ஜோடிகளான எழில் முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோரை வெட்டி படுகொலை செய்யப்பட்டனர் இந்த வழக்கில் கொலை குற்றவாளியை கைது செய்து ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்த நிலையில் இந்த வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி குற்றவாளிக்கு தீர்ப்பு பெற்று தர உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினரை கௌரவிக்கும் விதமாக தேனி அருகே கோட்டூரில் எழில் கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது சுருளி அருவியில் படுகொலை செய்யப்பட்ட காதல் ஜோடிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் "2011 சுருளி அருவி இரட்டை படுகொலையும் சட்டப் போராட்டமும்" என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது இதில் முன்னாள் எம்.எல்.ஏவும், மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி, பாட்டாளி மக்கள் கட்சி வடிவில் ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டனர் பின்னர் இந்த வழக்கிற்கு ஒரு துணையாக இருந்த சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் காவல்துறையினருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்த நிகழ்வில் கோட்டூர் பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story




