ஓசூர்: வள்ளலாரின் 202 வது பிறந்த விழா- தமிழக கவர்னர் பங்கேற்பு.
Krishnagiri King 24x7 |14 Jan 2025 12:06 AM GMT
ஓசூர்: வள்ளலாரின் 202 வது பிறந்த விழா- தமிழக கவர்னர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் ஒரு திருமண மண்டபத்தில் வள்ளலார் விவேகம் அறக்கட்டளை சார்பில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று ஜீவகாருண்ய விருதுகளை வழங்கிப் உரையாற்றினார்.அப்போது நான் வள்ளலாரின் பக்தன். அவருடைய கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். தமிழக ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலை, வள்ளலார் பூங்கா அமைத்துள்ளேன். எனக்கு குழப்பம் ஏற்படும்போது வள்ளலாரை நினைத்து தியானம் செய்யும் போது எனது குழப்பத்துக்குத் தீர்வு கிடைக்கும். மேலும் நமது பூமி வள்ளலார், சுவாமி விவேகானந்தர், ராமானுஜர் ஆகியோர் பிறந்த புண்ணிய பூமியாகும். அவர்கள் தீண்டாமை, ஏற்றத் தாழ்வைப் போக்க பாடுபட்டனர். எனவே வள்ளலாரின் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். வள்ளலாரின் போதனைகளை பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மூலம் பயிற்றுவிக்க வேண்டும் என்று பல கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
Next Story