வடகிழக்கு பருவமழை-2024 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம்
Dindigul King 24x7 |20 Sep 2024 1:51 PM GMT
வடகிழக்கு பருவமழை-2024 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை-2024 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று(20.09.2024) நடைபெற்றது. வடகிழக்கு பருவமழைக்காலம் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, மேற்படி இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் கிசான்குமார், சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story