முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'பிக்ஸல் ஷோ-2024' விழா கொண்டாட்டம்.

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிக்ஸல் ஷோ-2024 விழா கொண்டாட்டம்.
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'பிக்ஸல் ஷோ-2024' விழா கொண்டாட்டம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில், ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத் துறைகளின் சார்பில் 'பிக்ஸல் ஷோ-2024' என்னும் தலைப்பிலான விழாவானது, கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிப் போட்டிகளோடு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தனிநபர் மற்றும் குழு நடனம், பாடல் மற்றும் குறும்படம் முதலான மேடைப் போட்டிகளும், குறியீட்டு பிழைத்திருத்தம், வலைத்தள வடிவமைப்பு, லோகோ உருவாக்கம், வீடியோ உருவாக்கம், மெகந்தி, முகம் மற்றும் நக ஓவியம், நெருப்பில்லாமல் சமைத்தல் முதலான மேடை அல்லாத போட்டிகளும் என 21 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவிற்கு சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளினுடைய மாணவ, மாணவிகள் சுமார் 650-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழாவில் கல்லூரியின் தாளாளர் கே.பி.இராமசுவாமி அவர்கள், முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜயகுமார், துணைமுதல்வர் முனைவர் ஆ.ஸ்டெல்லாபேபி ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத் துறைகளின் புலமுதன்மையர் முனைவர் வி.விஜயதீபா ஆகியோருடன் இணைந்துதகவல் தொழில்நுட்பத் துறையின் மாதாந்திர மின்னிதழை தொடக்கிவைத்தார். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
Next Story