முதலமைச்சர் அவர்களின் மாநில அளவிலான விளையாட்டு விருதுகள் (2024-2025 முதல் 2025-2026 வரை) தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-

X
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்), 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு பரிசாக தலா ரூ.1.00 இலட்சம், ரூ.10,000/-மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டிம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள், இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். ஒரு நபருக்கு இரண்டாவது முறையாக இவ்விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும். 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு சிறந்த விளையாட்டு வீரர்கள் சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர் /உடற்கல்வி ஆசிரியர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரையிலான சாதனைகளும், ஆட்ட நடுவர்-நீதிபதி, நன்கொடையாளர், நிர்வாகி பிரிவுகளுக்கு 01.04.2022 to 31.03.2024 வரையிலான சாதனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர் /உடற்கல்வி ஆசிரியர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 01.04.2022 முதல் 31.03.2025 வரையிலான சாதனைகளும், ஆட்ட நடுவர்-நீதிபதி, நன்கொடையாளர், நிர்வாகி பிரிவுகளுக்கு 01.04.2023 முதல் 31.03.2025 வரையிலான சாதனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் /முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் /மகளிர் மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர், நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா ரோடு பெரியமேடு சென்னை- 03 என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைமை அலுவலகத்திற்கு 11.08.2025 மாலை 5.45 க்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story

