மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 நிதியில் இருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு...

மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 நிதியில் இருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு...
X
மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 நிதியில் இருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் 5-வது வார்டு நாடார் தெரு பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 நிதியில் இருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.அதன் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை தாங்கி, அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கல்வெட்டு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து பேசிய எம்பி ராஜேஷ்குமார் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசியும் மேலும் கூட்டு குடிநீர் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி, ரேசன் பொருள் வீடு தேடி வரும் திட்டம், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சலுகைகள் குறித்தும் பேசினார். இந்த விழாவில், வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ், துணைத் தலைவர் மாதேஸ், இ.ஓ.,சரவணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story