ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 01-01-2025 ஆம் ஆண்டு தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பு வெளியிடப்பட்ட இந்த பட்டியல் விவரம். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி தொகுதி) மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 4,27,406 பேரும், பெண் வாக்காளர்கள் 4,61,787 பேரும், இதர வாக்காளர்கள் 80 பேர் என மொத்தம் 8 லட்சத்து, 89 ஆயிரத்து, 273 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் எண்ணிக்கை 105 ஆகவும், வாக்குச்சாவடி அமைவிடங்களில் எண்ணிக்கை 629 ஆகவும் உள்ளது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story









