கே.பி.ஆர் கல்லூரியில் பிரவர்த்தனா – 2025 முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா !

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் “பிரவர்த்தனா – 2025” விழா ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது.
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் பிரவர்த்தனா – 2025 விழா இன்று நடைபெற்றது. முதல்வர் முனைவர் பி.கீதா வரவேற்புரை ஆற்றினார். கல்விக் குழுமங்களின் தலைவர் Dr. K.P. ராமசாமி தலைமையுரை ஆற்றி, மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டியதின் அவசியத்தை கூறினார். செயலர் திருமதி காயத்ரி அனந்தகிருஷ்ணன், மாணவர் நலன் குறித்த உரையுடன் நிகழ்வைச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக ரைட்ஸ் டாட்ஸ் நிறுவன நிறுவனர் வித்யா போஜன் கலந்து கொண்டு, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். மாநில, தேசிய மட்டத்தில் சாதனைபுரிந்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர். 4500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வை மேலாண்மையியல் புலத்தினர் ஒருங்கிணைத்தனர்.
Next Story