நாகர்கோவிலில் அக்ரிவிஷன் 2025 கருத்தரங்கம்

X
கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் பசுமை பேரியக்கத்தின் நீடித்த வேளாண்மை வளர்ச்சிக்கான அக்ரிவிஷன் கருத்தரங்கு நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் கலையரங்கத்தில் தலைவர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. கிரேஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் கீதாபான்ஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஹோட்டல் கிரானைட் பேலஸ் இயக்குனர் அனிதா நடராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் ஜெயராஜ் வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்திய ராணுவ ஆராய்ச்சி முன்னாள் விஞ்ஞானி குமார் பேருரை நிகழ்த்தினார். ஆட்சி அலுவலர் ஜெயசேகர் நன்றி கூறினார். தொடர்ந்து கருத்தரங்கில் தோட்டக்கலை உபகரணங்கள், உரப்பொட்டலங்கள், பச்சை சீருடைகள், சாம்பியன் விருதுகள் வழங்கப்பட்டது.
Next Story

