கோவையில் நடைபெறும் ஈஷா கிராமோத்சவம்-2025 இறுதிப்போட்டி !

ஈஷா கிராமோத்சவம் இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், சாய்னா நேவால், வைஷாலி, பவினா படேல் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
ஈஷா கிராமோத்சவம்-2025 இறுதிப்போட்டி வரும் 21-ம் தேதி ஈஷா ஆதியோகி வளாகத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈஷா தன்னார்வலரும், கவிஞருமான மரபின்மைந்தன் முத்தையா நேற்று (18.09.2025) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவத, ஆகஸ்ட் 16 முதல் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் நடைபெற்ற போட்டிகளில், 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 63,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் இறுதிக்குத் தேர்வாகியுள்ளன. அரையிறுதி போட்டிகள் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டியும் இடம்பெற உள்ளது. இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
Next Story