ருத்ர பூசன் 2025 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா

X
திண்டுக்கல்லில் சிவ பக்த சேனா சார்பில் ருத்ர பூஷன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் வ.உ.சிதம்பரம் பிள்ளை நற்பணி மன்ற 42 வது ஆண்டு விழா மற்றும் ருத்ர பூஷன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிவபக்த சேனா நிறுவனத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். டாக்டர் திரிலோகசந்தர், வ.உ.சி. மன்ற நிரந்தர தலைவர் தனபாலன், திமுக ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் மேயர் இளமதி, வ.உ.சி. பேரன் சிதம்பரத்திற்கு ருத்ர பூஷன் விருது வழங்கினார். நிகழ்ச்சியில், மன்ற செயலாளர் சாய் பிரசாத், திருவெங்கடபதி, குமாரசாமி, சுந்தரம் பிள்ளை, முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

