ஊத்தங்கரையில் 2026 சட்டபேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வேண்டுகோள்.

ஊத்தங்கரையில் 2026 சட்டபேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வேண்டுகோள்.
ஊத்தங்கரையில் 2026 சட்டபேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வேண்டுகோள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பேசிய ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள, சட்டபேரவை தேர்தலில் அதிமுக கவை அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் கரத்தை வலுப்படுத்த அனைத்து தொண்டர்களும் பாடுபட வேண்டும் எனவும், அதிமுக வின் கோட்டையாக உள்ள ஊத்தங்கரை தொகுதியில், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் உறுதி ஏற்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி, மாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமலர் ஜீவானந்தம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் சேகர்,ராமசாமி, ஆகியோர் கலந்துக்கொண்டு எக்கூர், ஆண்டியூர், கீழ்மத்தூர், மகனூர்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று உறுப்பினர் அட்டைகளை வழங்கினர்.
Next Story