வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் நமது எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பேச்சு

X
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் நமது எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேச்சு.. விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பி.ராமச்சந்திராபுரம் ஏ.ராமலிங்கபுரம் பகுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி ஏற்பாட்டில் (பாக) பூத்செயலாளர்கள் (பாக) நிர்வாகிகள் நியமனம் செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையிலும்,கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளரும் முன்னாள் வாரிய தலைவரும் பூத்கமிட்டி பொறுப்பாளருமான ஜான் மகேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக மகளிர் அணி துணைச் செயலாளருமான சந்திரபிரபாமுத்தையா, வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கலைச்செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இதற்க்கு முன்பு தேர்தல் நடைபெறும் போது பூத் கமிட்டியில் கிளை பொறுப்பாளர்களை போடுவோம்.ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை நமது பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கட்சிக்கு உழைப்பவர்களை 20 ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் விவரம் தலைமைக் கழகத்தில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நியமனம் செய்வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பூத் கமிட்டியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். விலைவாசி என்பது திமுக ஆட்சியில் விஷமாக ஏறிவிட்டது ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு செலவை இழுத்து விட்டுள்ளனர். வீட்டு வரி சொத்து வரி விதை நெல் விலை, நெல்லுக்கு மருந்து உரம் விலை, கட்டுமானத்தில் செங்கல் விலை, சிமெண்ட் விலை உயர்ந்துவிட்டன ஆயிரம் ரூபாய் திமுக அரசு கொடுத்தால் அது போதாது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் நமது எடப்பாடியார். மக்கள் எதிர்பார்க்கின்ற விலைவாசிகள் கட்டுப்படுத்தப்படும். உழைப்பவர்களுக்கான மரியாதை,ஊதியம் கிடைக்கின்ற வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.திட்டங்களை சொன்னால் செய்யக்கூடிய ஆட்சி அம்மாவின் ஆட்சி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் ஏழைகள் மதிக்கப்பட்டார்கள். புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இல்லாதவர்கள் வாழவைக்கப்பட்டார்கள்.எடப்பாடியார் காலத்தில் ஏழை எளிய மக்கள் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக மெடிக்கல் கல்லூரிகளை கொண்டு வந்து பெருமை பெற்றவர். விவசாயிகளின் நன்மைக்காக விவசாய கடன், கல்வி கடன், நகை கடன்களை ரத்து செய்தவர் எடப்பாடியார். அனைத்து கடன்களையும் ரத்து செய்யப்படும் என்ற ஆட்சிக்கு வந்த திமுக ஆள் பார்த்து ரத்து செய்ததாக தான் பல பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் இந்த நிலை மாற வேண்டும் என்றால் அண்ணா திமுக ஆள வேண்டும் அதற்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
Next Story

