செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி – 2026 திமுக வெற்றி வேண்டி கோவையில் சிறப்பு வழிபாடு!

X
கோவை சிறுவாணி அடிவாரத்தில் உள்ள பழங்குடி கிராமம் சீங்கபதியில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் மற்றும் சாடியம்மன் கோவிலில், தி.மு.க வினர் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், அவரது மனைவி அமுதஜோதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில், 2026-ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கவும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. கோவை குற்றால அருவியில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த நீருடன் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
Next Story

