தேமுதிகவுக்கு 2026-ல் மிகப் பெரிய எழுச்சி: பிரேமலதா விஜயகாந்த்

X
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா சென்னையில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப் பட்டது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் மற்றும் சகோதரர் எல்.கே.சுதிஷ் ஆகியோருடன் விஜயகாந்தின் சமாதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். அதைத்தொடர்ந்து ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். கட்சிக் கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கிய பிரேமலதா, பின்னர் பிறந்த நாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 10 ஆயிரம் பேருக்கான அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது, முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இரண்டாம் கட்ட பயணத்தை விரைவில் அறிவிப்போம். ஜன.9-ம் தேதி தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு - 2.0’ கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது என்று அவர் கூறினார்.
Next Story

