வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026, கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியினை கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக வாக்காளர் பட்டியல் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியினை கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று BLO App மூலம் பதிவேற்றும் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தொடர்புடைய வாக்காளர்கள் திருப்பி வழங்க வசதியாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் இராசிபுரம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியினை கள ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் முகாமில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீடு குறித்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Next Story