நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026, சிறப்பு முகாம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை பெற்று, BLO App மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களில் இறப்பு, நிரந்தர மாற்றமடைந்தவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், ஏற்கனவே வேறு இடங்களில் பதிவு செய்தவர்கள் என இனம் வாரியாக பட்டியலிடப்பட்ட விவரங்களை, வாக்காளர் பதிவு அலுவலர்களிடமிருந்து பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குசாவடி நிலை முகவர்கள் மூலம் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.மேலும் தகுதியான வாக்காளர்கள் யாரும் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுவிடக்கூடாது என்றும், களப்பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கடைசி நாள் வரையில் காத்திருக்காமல் முடிவு செய்யப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை அவ்வப்போதே பதிவேற்றம் செய்ய ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா, வாக்காளர் பதிவு அலுவலர்களான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ்.லெனின், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள், துறைச்சாரந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


