பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் கணக்கெடுப்பு காலம் முடிவடைந்தது.

X
Perambalur King 24x7 |17 Dec 2025 10:19 PM ISTதிருத்தங்களின் படி 27.10.2025 அன்று வரை 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, 148 குன்னம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் இடம் பெற்றிருந்த 5,90,490 வாக்காளர்களுக்கும் முழுமையாக கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கி கணக்கெடுப்பு செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் கணக்கெடுப்பு காலம் முடிவடைந்தது. 19.12.2025 வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தகவல் இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026- பணி பெரம்பலூர் மாவட்டத்தில் 06.01.2025 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 06.01.2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற தொடர் பதிவுகள் மற்றும் திருத்தங்களின் படி 27.10.2025 அன்று வரை 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, 148 குன்னம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் இடம் பெற்றிருந்த 5,90,490 வாக்காளர்களுக்கும் முழுமையாக கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கி கணக்கெடுப்பு செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் கணக்கெடுப்பு காலமான 04.11.2025 முதல் 14.12.2025 வரை, பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டுள்ள கணக்கீட்டுப் படிவங்களின் எண்ணிக்கை அடிப்படையில் விசாரணைகள் மேற்கொண்டு வாக்குசாவடி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 19.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அங்கீகரிக்கப்பட்ட் அரசியல் கட்சியினரின் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது. வாக்குசாவடிகள் மறுசீரமைப்பு: தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடியில் பதிவில் உள்ள வாக்காளர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 1200 ஆக வரையறை (ஊரக பகுதியில் / நகரப்பகுதியில்) செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ளவை / பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் போன்ற முக்கியமான வாக்காளர்களின் வசதிகள் காரணங்களுக்காகவும் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 332 வாக்குச்சாவடிகளும், 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 320 வாக்குச்சாவடிகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஏற்புடன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 55 புதிய வாக்குச்சாவடிகளும் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 25 புதிய வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் 2 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ளவை என்ற பிரிவில் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் பாகம் எண் 124 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாலிகண்டபுரம் என்பது இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய பாகம் எண் 143 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தம்பை மற்றும் பாகம் எண் 144 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாலிகண்டபுரம் என பிரித்து மாற்றப்பட்டுள்ளது மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் பாகம் எண் 133 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேரளி என்பது இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய பாகம் எண் 147 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேரளி மற்றும் பாகம் எண் 148 மகாத்மா காந்தி பப்ளிக் பள்ளி (சிபிஎஸ்இ), பேரளி என பிரித்து மாற்றப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற அனைத்து புதிய வாக்குச்சாவடிகளும் அதே வாக்குச்சாவடி மையங்களில் வேறு கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப வழங்காத வாக்காளர்கள்: கணக்கீட்டு படிவம் திரும்பப் பெறும் இறுதி நாளான 14.12.2025 வரை கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப வழங்காமல் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையும் வாக்குச்சாவடிகள் வாரியாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர் (BLA-2) மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) கள விசாரணை அடிப்படையில் கீழ்கண்ட வகைப்பாட்டில் அதாவது இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் (Absentee) / நிரந்தரமாக இடம்பெயர்ந்த (Shifted) / இறந்துபோன வாக்காளர்கள் (Death) / இரட்டை பதிவாக (Double Entry) உள்ள வாக்காளர்கள் மற்றும் இதர (Others) வாக்காளர்கள் ASDD என்றவாறு அரசியல் கட்சியினரின் ஒப்புதல் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. ASDD வாக்காளர்களின் விவரங்கள் அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில், 19.12.2025 அன்றே பார்வைக்கு வைக்கப்படும். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலரின் perambalur.nic.in இணையதளத்தில் உள்ள தேர்தல் துறையில் பதிவேற்றம் செய்யப்படும். 19.12.2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலானது மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் படி வெளியிடப்படவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் ASDD வாக்காளர்களின் விவரங்கள் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆட்சேபணையை 19.12.2025 முதல் 18.01.2026-க்குள் வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, பெரம்பலூர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், 148 குன்னம் சட்டமன்ற தொகுதி, பெரம்பலூர் அலுவலகங்களில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story
