வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2002 வாக்காளர் பட்டியலுடன் தொடர்பு படுத்த இயலாக வாக்காளர்களுக்கு தற்போது நோட்டீஸ் (Notice) வழங்கி, கூடுதல் ஆவணங்கள் பெற்று தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான பணியில் விசாரணை அலுவலர்களாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 20 நபர்கள் வீதம் 120 கூடுதல் வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் இன்று (27.12.2025) நாளை (28.12.2025) மற்றும் 03.01.2026 சனிக்கிழமை, 04.01.2026 ஞாயிற்றுகிழமை ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கோட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் குமரமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடைபெற்றதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


