தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும்

X
Ranipet King 24x7 |5 Jan 2026 9:44 PM ISTஇராணிப்பேட்டை நகர கூட்டுறவு சங்க வளாகத்திலிருந்து அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3,51,884 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கிட கொள்முதல் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கரும்புகள் இராணிப்பேட்டை நகர கூட்டுறவு சங்க வளாகத்திலிருந்து அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மண்டல இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் பிரபாகரன் மற்றும் பலர் உள்ளனர்.
Next Story
