கடந்த பாராளுமன்றத் தேர்தலை விட 2026 சட்டமன்ற தேர்தலில் அருந்ததியர்கள் வாக்கு திமுகவுக்கு அதிகம் கிடைக்கும் திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் பேட்டி
Tiruchengode King 24x7 |8 Feb 2026 8:23 PM ISTகடந்த பாராளுமன்றத் தேர்தலை விட 2026 சட்டமன்ற தேர்தலில் அருந்ததியர்கள் வாக்கு திமுகவுக்கு அதிகம் கிடைக்கும் திருச்செங்கோட்டில் தனி நபர் பிரச்சனைகளால் சில குறைபாடுகள் இருக்கலாமே தவிர மற்றபடி வாக்கு சிதறல் என்பது இருக்காது ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் திருச்செங்கோட்டில் பேட்டி
ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மேற்கு மண்டல மாநில மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணகுமார் மாநில துணைப் பொதுச் செயலாளர், தமிழரசு மாவட்ட தலைவர் வேங்கை மார்பன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் என 30பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கூறியதாவது தமிழகத்தில் அருந்ததியர் இனத்திற்கான கலைஞர் அரசின் ஸ்டாலின் அரசும் நிறைய திட்டங்களை கொண்டு வந்து எங்கள் வாழ்வை முன்னேற்றியுள்ளனர் அதற்கு ஏற்றார் போல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த ஆங்கிலேயர்களின் குறிப்பிடப்பட்டது போல் அருந்ததியர் என ஓட்டுகள் 60% திமுகவுக்கே விழுந்தது இந்த முறை அதைவிட அதிகமாக வாக்குகள் கிடைக்கும்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இருநூறு தொகுதிகளை வெல்வோம் என தமிழ்நாடு முதல்வர் சொல்கிறார் 200 அல்ல 200க்கும் அதிகமான பகுதிகளை திமுக வெல்லும் என கூறினார் தொடர்ந்து செய்தியாளர்கள் அருந்ததியர் இனத்திற்குதிமுக நிறைய செய்திருப்பதாககூறுகிறீர்கள் ஆனால் உங்கள் சமூகத்து வாக்குகள் திமுகவுக்கு அதிகமாக சென்றதில்லையே எனக் கேட்ட போதுஇங்கு தனிப்பட்ட பல விஷயங்கள் மாறி இருக்கலாம் வேட்பாளர் மீது ஏதாவது கோபம்இருக்கலாம் ஆனால் திமுக மீது எந்தஅருந்ததிய மக்களுக்கும் கோபம் இல்லை.திமுகவை முழுமையாக அருந்ததிர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் எனக் கூறினார் தொடர்ந்து அருந்ததியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3 சதவீத உள்ளீட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறார்கள் ஆனால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிகமான இடங்கள் வழங்குவதில்லையே என கேட்டபோதுஒரு தொகுதி தான் என்றாலும் அது ஜெயிக்கிற தொகுதியாக தான் கொடுக்கிறார்கள்.அருந்ததியர்களுக்கு 10 தொகுதி வழங்கப்பட வேண்டும் என கேட்டிருக்கிறோம் தருவார்கள் என நம்புகிறேன்இந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் அதிகமான அருந்ததிய வேட்பாளர்கள் இருப்பார்கள்.இந்தக் கூட்டம் திருச்செங்கோட்டில் அருந்ததியர் மக்களிடம்உள்ள பணக்கசப்பை நீக்குவதற்காக நடத்தப்படும் கூட்டம் எனக் கொள்ளலாமா என செய்தியா அவர்கள் கேட்டபோது திருச்செங்கோட்டை மட்டும் மனதில் வைத்து இது இந்த கூட்டம் நடத்தப்படவில்லை மேற்கு மண்டல அளவிலான கூட்டம்ரிசர்வ் தொகுதிகளில் எப்படி செயல்பட வேண்டும் பொது தொகுதிகளில் செயல்படும் விதம் ஆகியவை குறித்து ஆலோசிக்க தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறதுமேற்கு மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் தனிநபர் பிரச்சினைகளாக இருக்கிறதே தவிர கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனையாக இல்லைஎன்பதை நான் தெரிந்து கொண்டேன்.இவற்றையெல்லாம் எளிமையாக கடந்து அடுத்த கட்டத்திற்கு பயணப்படும் நிலையில்தான் திமுகவும் ஆதித்தமிழர் பேரவையும் உள்ளதுகூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள் ஏற்கனவே இருந்த கூட்டணி வலிமையாக இருக்கிறது ஆனால் அதிமுகவில் என்ன நடக்கிறது கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த தோழமைக் கட்சிகள் பாஜகவை தான் நாடுகின்றனர் ஆனால் கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என எடப்பாடி கூறிக் கொண்டுள்ளார்.ஏற்கனவே பதினொரு முறை தோல்வி கண்ட பழனிச்சாமி 12 வது முறையாக எப்படி வெற்றி பெறுவேன் என சொல்கிறார் என தெரியவில்லைதிமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளதுதாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் ஓட்டுகளை குறி வைத்து தான் விஜய் களமிருக்கிறார் என கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டபோது விஜய் ஜாதி ரீதியான அரசியல் செய்வதாக எனக்கு தெரியவில்லைஜென் சி எனசொல்லப் படுகிறவாக்காளர்களை மட்டுமே குறிவைத்துஏக்கம் நடத்தி வருகிறார் ரசிகர்களை ஓட்டு இல்லாதவர்களை வீட்டுக்கு ஒரு விஜய் வருவார் என சொல்கிறார் ஆனால் அவர்களின் பலருக்கு ஓட்டு இல்லைவிஜய்க்கு கூடுகிற கூட்டம் அவருக்கான ரசிகர் கூட்டமே தவிர இது அரசியலுக்கு பயன்படுத்த முடியாதுநான் அவரிடத்தில் சில கேள்விகளை கேட்கிறேன் திருப்பரங்குன்றத்தில் நடந்த பிரச்சனைக்கு விஜய் என்ன குரல் கொடுத்தார்தொழிலாளர் சட்டம் குறித்த விஜயின் கருத்து என்ன விவசாயிகள் சட்டம் குறித்து அவரது கருத்து என்னஅருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து அவருடைய கருத்து என்னஇப்படி எதை பற்றியாவது விஜய் கருத்து சொல்லி இருக்கிறாராகுறைந்தபட்சம் பத்திரிக்கையாளர்களை முறையாக சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார் பத்திரிகைக்காரர்கள் கேள்வியை எதிர்கொண்டுள்ளாராஅதற்கே அவர் தயாராக இல்லை அவர் சினிமா சூட்டிங் என நினைத்துக் கொண்டிருக்கிறார்ஒரு மாதத்திற்கு முன்பு வரை திமுகவை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தவர் தற்போது அதிமுகவை ஊழல் பற்றிய விமர்சிக்கிறார்இப்பொழுது எடப்பாடி யார் எதிர்த்து பேசுகிறார் இதையெல்லாம் மக்கள் கூர்மையாக கவனித்துக் கொண்டுள்ளனர்மக்கள் ஏமாளிகள் அல்ல மிகத் தெளிவாக வாக்குகளை அளிப்பார்கள்.15 கோடி வருமான வரித்துறை வரியைப்பு செய்ததாகவும் அதனை கட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் நான் கட்ட வேண்டும் அல்லது கட்ட வேண்டியதில்லை என சொல்லாமல் காலதாமதமாக நோட்டீஸ் கொடுத்தீர்கள் அதனால் கட்ட முடியவில்லை எனத்தான் நீதிமன்றத்தில் சொல்கிறார்கள் உங்கள் படம் வெளிவரும்போது 200 ரூபாய்டிக்கெட் 2000 ரூபாய்க்கு பிளாக்கில் டிக்கெட் விற்கிறார்களே அதைதடுக்க முடியுமாஅதைத் தடுத்து நிறுத்துங்கள் மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என கூறினார்.
Next Story


