வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 (SIR)

X
Dharampuri King 24x7 |25 Nov 2025 7:57 PM ISTதர்மபுரி பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பற்றி கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்கம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ சதீஷ் அவர்கள் தலைமையிலும் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP ஆகியோரின் முன்னிலையில் தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு SIR குறித்து சந்தேகங்களையும் விளக்கங்களையும் எடுத்துரைத்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது நிகழ்ச்சியில் தர்மபுரி கோட்டாட்சியர் காயத்ரி தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சேகர், தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் நகர கழக செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், ஒன்றிய கழக செயலாளர்கள் காவேரி, சண்முகம், பாலக்கோடு பேரூர் செயலாளர் முரளி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், பொறுப்பு குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பாஸ்கர், நகர மன்ற உறுப்பினர் சௌந்தரராஜன், தகவல் தொழில் அணி மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் , வினோத்குமார், நகர ஒருங்கிணைப்பாளர் முருகவேல் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
