ஜெயங்கொண்டத்தில் 203 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரு ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர்

X
அரியலூர், ஏப்.11- அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 203 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, அவர்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் என சுமார் ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

