சூலூரில் ரூ.2.09 கோடியில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்!

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.2.09 கோடி செலவில் அமையவுள்ள மழைநீர் வடிகால் பணிக்கான பூமி பூஜை சரஸ்வதி நகர் பகுதியில் நடைபெற்றது.
சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.2.09 கோடி செலவில் அமையவுள்ள மழைநீர் வடிகால் பணிக்கான பூமி பூஜை சரஸ்வதி நகர் பகுதியில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் சோலை கணேஷ், கவுன்சிலர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பணிகள் முடிந்தால், மழைக்காலங்களில் ஏற்படும் நீர் தேக்கம் குறைந்து பொதுமக்களுக்கு நிவாரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
Next Story