காப்பீட்டு நிறுவனம் ரூ.21 இலட்சம் வழங்க ஆணையம் உத்தரவு!
Thoothukudi King 24x7 |23 Aug 2024 4:24 AM GMT
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.21 இலட்சம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.21 இலட்சம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சார்ந்த பீட்டர் கிறிஸ்டியன் என்பவரது ரத்த உறவினர் லிவிங்ஸ்டன் என்பவர் தனது பெயரில் பாலிசி எடுத்திருந்தார். பாலிசி நடப்பில் இருக்கும் போதே எதிர்பாராத விதமாக லிவிங்ஸ்டன் காலமாகி விட்டார். இதையடுத்து இறந்து போன லிவிங்ஸ்டனின் சட்டப்படியான நாமினியான பீட்டர் கிறிஸ்டியன் இன்சூரன்ஸ் இறப்பு நிவாரண காப்பீட்டு தொகையை கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் காப்பீட்டு தொகை ரூபாய் 20 இலட்சம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 1,00,000;, ஆக மொத்தம் ரூபாய்; 21 இலட்சத்தை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story