நாமக்கல்லில் முரசொலி மாறனின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு! -அமைச்சர், எம்.பி., எம்எல்ஏக்கள் மலரஞ்சலி

நாமக்கல்லில் முரசொலி மாறனின்  21-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு! -அமைச்சர், எம்.பி., எம்எல்ஏக்கள் மலரஞ்சலி
X
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாமக்கல்லில் முரசொலி மாறன் திருவுருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தி. மு.கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான முரசொலி மாறன், முரசொலி நாளிதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர், மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, பன்னாட்டு வணிக விலை பேரங்களில் இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முன்னிலையில் கழக நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், முனவர் ஜான், சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பி.இராமலிங்கம், சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி, நாமக்கல் மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர் கழக செயலாளர்கள் , கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story