லாரி மீது வேன் மோதல் குன்றத்துாரில் 21 பேர் காயம்

லாரி மீது வேன் மோதல் குன்றத்துாரில் 21 பேர் காயம்
X
குன்றத்தூரில் லாரி மீது வேன் மோதி விபத்து 21 பேர்சிறு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மதுபான தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, கூடுவாஞ்சேரி, முடிச்சூர், படப்பை பகுதி களில் இருந்து நேற்று, ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த், 26, வேனைஓட்டிச்சென்றார். வண்டலுார் - - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கத்தை கடந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது, எதிர்பாராத விதமாக வேன் மோதியது. வேனின் முன்பகுதி சேதமடைந்தது. ஓட்டுநர் ஆனந்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வேனில் பயணித்த, 18 பெண்கள், 3 ஆண்கள் உட்பட, 21 பேருக்கு காயம் ஏற்பட்டது. டிரைவர் தவிர மற்றவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story