கரூரில்,ரூ. 21 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.
கரூரில்,ரூ. 21 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. இதில் வார்டு எண் 42, 44, 45, 46,47,48 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 21.04 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகளை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல், மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றுதல் போன்ற பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அந்தந்த பகுதிகளில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாநகராட்சிக்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா, துணைமேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், கோல்ட் ஸ்பாட் ராஜா, அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story





