ஊத்துக்கொட்டை அருகே பயங்கர விபத்து 21 வயது வாலிபன் பலி

X
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி வள்ளியம்மா மகன் முகிலன் 21என்ற இளைஞர் தேர்வாயில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். வழக்கம்போல் பணிக்கு சென்று வேலையை முடித்து வீட்டிற்கு வரும் பொழுது இலட்சிவாக்கம் அருகே ஊத்துக்கோட்டையில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த ஆந்திர பிரதேசம் பதிவு கொண்ட லாரியில் மோதி விபத்து இதில் பலத்த காயம் அடைந்த முகிலனை அருகில் உள்ள பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்கம் பக்கத்தினர் அனுமதித்தினர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை சி1 காவல் நிலையம் உதவி ஆய்வாளர் பிரசன்னா வரதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்குள்ளான காரணத்தை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

