தொகரப்பள்ளி பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து 21 பேருக்கு காயம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து திருவண்ணமலைக்கு மஞ்சள் நீராட்டு விழாவிற்காக நேற்று மாலை 42 பேருடன் சென்ற தனியார் பஸ் மத்தூர் அருகேயுள்ள தொகரப்பள்ளி காட்டு பகுதியில் சாலை ஓரத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 21 பேருக்கு காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பஸ் விபத்து காரணமாக 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

