சிவகாசி- காமராஜருக்கு எதிரான பேச்சு!-21-ம் தேதி விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

சிவகாசி- காமராஜருக்கு எதிரான பேச்சு!-21-ம் தேதி விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
X
சிவகாசி- காமராஜருக்கு எதிரான பேச்சு!-21-ம் தேதி விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
சிவகாசி- காமராஜருக்கு எதிரான பேச்சு!-21-ம் தேதி விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!! சிவகாசி மாநகர நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காமராஜரின் பிறந்த தின விழா கொண்டாட்டத்தை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்த நிர்வாகிகள், காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம். பி., யை கண்டித்து 21-ம் தேதி திங்கட்கிழமை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும், இதன் மூலம் காமராஜர் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டி:- கண்ணன், மாநகர தலைவர் - நாடார் மகாஜன சங்கம், சிவகாசி.
Next Story