கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் 21 புதிய கழிப்பிடங்கள் – வானதி சீனிவாசன் பள்ளிகளுக்கு ஒப்படைப்பு !
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கழிப்பிடங்களை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திறந்து வழங்கினார். இதேபோல் மொத்தம் 5 பள்ளிகளில் 21 கழிப்பிடங்கள் நிர்மாலையா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டன. பெங்களூரைச் சேர்ந்த 24/7 AI நிறுவனம் மற்றும் கிளப் 41 ரவுண்ட் டேபிள் தொண்டு நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தின. இந்த நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், “மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, கழிப்பிட வசதி மிக அவசியமான ஒன்று. இதற்காக ஸ்வச் பாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்று அந்த முயற்சியின் ஒரு பகுதியாக கோவையில் 21 கழிப்பிடங்கள் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
Next Story



