பொள்ளாச்சி சிறார் பாலியல் வன்புணர்ச்சி: 21 வயது வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பொள்ளாச்சி சிறார் பாலியல் வன்புணர்ச்சி: 21 வயது வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
X
போக்சோ வழக்கில் கைதான வாலிபர்: கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக, திருவாரூரைச் சேர்ந்த கவியரசன் (21) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அளித்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கவியரசனை "பாலியல் குற்றவாளி" எனக் கருதி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, சிறையில் இருந்த கவியரசன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
Next Story