கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரம் - 21 குளங்கள் நிரம்பின !
கோவையில் தொடர்ச்சியாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் கோவைக்கு அருகிலுள்ள 24 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில் கோளராம்பதி, நரசாம்பதி, வாலாங்குளம், வேடப்பட்டி புதுக்குளம் உள்ளிட்ட 21 குளங்கள் முழுவதும் நிரம்பி விட்டன. நொய்யல் ஆற்றை நீராதாரமாகக் கொண்ட பேரூர் பெரியகுளம் 97 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ள நிலையில், சின்னவேடம்பட்டி மற்றும் எஸ்.எஸ்.குளம் மட்டுமே நிரம்பாமல் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் பாய்ந்து வருகிறது.
Next Story



