இராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த கலவை அருகே கள் விடுதலை மாநாட்டில் தமிழக அரசுக்கு எதிராக 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Ranipet King 24x7 |21 Jan 2026 7:57 PM ISTமுன்னதாக பனையேறி தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்கள், சிறுவர்கள் பனை கள்ளை தலையில் சுமந்தபடி மேளதாலம் முழங்க ஊர்வலமாக வருகைதந்து பனை மரத்தின் கீழ் படையலிட்டு பூஜை செய்து பெண்கள், சிறுவர்கள் என பனை கள்ளை பருகி கள் எமது உணவு கள் எமது உரிமை என்று முழங்கி எவ்வாறான தடைகளையும் அடக்கு முறைகளை
இராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த கலவை அருகே கள் விடுதலை மாநாட்டில் தமிழக அரசுக்கு எதிராக 21 தீர்மானங்கள் நிறைவேற்றம் பனை மரத்துக்கு பூஜை செய்து வழிபட்டதுடன் பெண்கள், சிறுவர்கள் கள் குடித்து கள் எமது உணவு என முழக்கமிட்டனர். இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தில் பனையேறிகள், விவசாயிகளின் சார்பில் கள் விடுதலை மாநாடு தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கள் விடுதலை மாநாட்டில், தமிழ்நாட்டில் மட்டுமே அமலில் இருக்கும் கள் இறக்கி விற்கும் தடையையும், மதுவிலக்கு சட்டத்திலிருந்து கள்ளையும் நிரந்தரமாக நீக்க வேண்டும், பனையேறிகளின் மீதான அடக்குமுறைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை காவல்துறை அறவே கைவிட வேண்டும், கள்ளை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும், பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டங்களையும் விபத்துகளுக்கு உரிய நிவாரணமும் அரசு வழங்க வேண்டும், இதுவரை தமிழ்நாடு முழுவதும் பனையறிகள் மீது தொடரப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பனையேறி தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்கள், சிறுவர்கள் பனை கள்ளை தலையில் சுமந்தபடி மேளதாலம் முழங்க ஊர்வலமாக வருகைதந்து பனை மரத்தின் கீழ் படையலிட்டு பூஜை செய்து பெண்கள், சிறுவர்கள் என பனை கள்ளை பருகி கள் எமது உணவு கள் எமது உரிமை என்று முழங்கி எவ்வாறான தடைகளையும் அடக்கு முறைகளையும் எங்கள் மீது யார் ஏவினாலும் அதை புறந்தள்ளி கள் விடுதலை அடைந்து விட்டோம் என்று முழக்கமிட்டனர். அதனை தொடர்ந்து பனையேறி தொழிலாளர்களின் பிள்ளைகள் பரதநாட்டியம், சிலம்பாட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பனையேறி மூதாட்டி ஒருவர் தலைகீழாக நின்று கள் எங்களது உரிமை என தெரிவித்தனர்.. இந்த மாநாட்டில் பனையேறி தொழிலாளர்கள், விவசாயிகள், தென்னை தொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்..
Next Story


