தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பிப்.21, 22, 23 நாட்களுக்கு ஓவிய, சிற்ப கலைக் கண்காட்சி 

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பிப்.21, 22, 23 நாட்களுக்கு ஓவிய, சிற்ப கலைக் கண்காட்சி 
X
கண்காட்சி
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய, சிற்ப கலைக் கண்காட்சி, தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் பிப்.21 முதல் 23 வரை மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் பயிலும் வண்ணக்கலைத்துறை, காட்சிவழித்தகவல் வடிவமைப்பு துறை மற்றும் சிற்பக்கலைத்துறை ஆகிய மூன்று துறைகளில் பயிலும் மாணவர்களுடைய கலை படைப்புகளில் ஆயில் கலர், அக்ரலிக் கலர் மற்றும் நீர் வண்ணம், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள் விழிப்புணர்வு போஸ்டர்கள், புகைப்படங்கள். கணினி ஓவியங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட உள்ளது.  சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கிய மாணாக்கர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றுகள் வழங்கப்பட உள்ளன. இக்கண்காட்சியானது மேற்குறிப்பிட்ட மூன்று தினங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அந்த மூன்று நாட்களும், புகைப்பட நுணுக்கங்கள் குறித்த பயிலரங்கம், பிப்.21 அன்று Textile Tie & dye, 22 அன்று காகிதக்கலை பொம்மலாட்டம்,  23 அன்று களிமண் சிற்பங்கள் என்ற பிரிவில் பயிற்சி பட்டறையும் காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்  தெரிவித்துள்ளார்.
Next Story