நாகம்பள்ளியில் ரூபாய் 2.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிய புறக்கடை கோழியின ஆராய்ச்சி

நாகம்பள்ளியில் ரூபாய் 2.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிய புறக்கடை கோழியின ஆராய்ச்சி
நாகம்பள்ளியில் ரூபாய் 2.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிய புறக்கடை கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழக அரசு கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கரூர் மாவட்டத்தில் புறக்கடை கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் ரூபாய் 2.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மையத்தினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி உடன் இடுபொருட்களும் வழங்கப்படும். மேலும், இனப்பெருக்க நாட்டுக்கோழிகள், வான்கோழி மற்றும் ஜப்பானிய காடை பண்ணைகளை நிறுவி, புறக்கடை முறையில் கோழி வளர்ப்பு தொழிலை ஊக்குவிப்பதற்காகவும், உயர்ந்த தரமான நாட்டுக்கோழி, வான்கோழி மற்றும் ஜப்பானிய காடைகளின் முட்டைகள்,இளம் குஞ்சுகள் மற்றும் இதர இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், அவற்றை அறிவியல் முறையில் பராமரிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கவும், கால்நடை தீவனமான அசோலா உற்பத்தி அலகை நிறுவுவதற்கும் இந்த மையம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story