நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில்

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் பழைய கட்டிடங்கள் புதுப்பித்தல், பள்ளி கழிவறைகள் கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல், பள்ளி கட்டிடங்கள் முழுவதும் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளது.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (05.03.2025) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ”நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார்கள். இத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த விருப்பமுள்ள தன்னார்வலர்கள் நன்கொடை வழங்கி உதவிடும் வகையில் idunammaschool.tn.school.gov.in என்ற இணையதளம் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த விருப்பமுள்ளவர்கள் இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி தங்கள் பங்களிப்பை எளிதில் வழங்கலாம். பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலை பள்ளியானது 1980 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 80 மாணவர்கள், 86 மாணவிகள் என மொத்தம் 166 மாணவ, மாணவியர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். பழமை வாய்ந்த இப்பள்ளியினை நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் பழைய கட்டிடங்கள் புதுப்பித்தல், பள்ளி கழிவறைகள் கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல், பள்ளி கட்டிடங்கள் முழுவதும் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இன்று மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், மாணவ,மாணவிகள் அனைவரும் இதனை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளியில் காய்கறி தோட்டங்கள் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதனை மாணவர்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்தி கல்வியில் கவனம் செலுத்தி, கல்வி பயில்வதில் சிறந்து விளங்க வேண்டும். நடப்பாண்டில் பொது தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும். எதிர்காலத்தில் பல்வேறு ஆளுமைகளாக நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் புத்தகப்பை, டீ-சர்ட், இனிப்பு பெட்டகங்கள் மற்றும் வடிவியல் பெட்டி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் வெரிடாஸ் பவுண்டேஷன் தலைவர் டாக்டர். டி.எஸ்.ஸ்ரீதர் இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள், நிறுவன நிர்வாக இயக்குனர் தூ.அருள் மணி, முதன்மை கல்வி அலுவலர் மு.முருகாம்பாள், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மா.செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) பெ.அய்யாசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் பள்ளி) கீ.லதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கி.ஜெய்சங்கர், பள்ளி தலைமை ஆசிரியை சை.வஹிதா பானு, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story