கரூர் -ரூ 21,500-ஐ வழிப்பறி செய்து தாக்கிய 5 திருநங்கைகள் கைது.

கரூர் -ரூ 21,500-ஐ வழிப்பறி செய்து தாக்கிய 5 திருநங்கைகள் கைது.
கரூர் -ரூ 21,500-ஐ வழிப்பறி செய்து தாக்கிய 5 திருநங்கைகள் கைது. தர்மபுரி மாவட்டம் இன்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவர் ரெட்டிபாளையத்தில் வசித்து வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் மதுரை பைபாஸ் சாலையில் சுக்காலியூர் மேம்பாலம் அருகே நடந்து சென்றபோது, அங்கிருந்த திருநங்கைள் 5 பேர் சுரேஷை வழிமறித்து, அவர் வைத்திருந்த பணம் 21,500 ரூபாயை பறித்துக் கொண்டனர். பணத்தை கேட்ட சுரேஷை திருநங்கைகள் ஒன்று சேர்ந்து கல்லால் அவரது தலையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக சுரேஷ் அளித்த புகாரில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திருநங்கைகளானகோபிகா (எ) ராகவி, சஞ்சனா (எ) மீனலோசனி, பிண்டு (எ) அனிதா, பரத் (எ) மகாஸ்ரீ, ஸ்ரீகாந்த் (எ) நந்தினி என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுரேஷிடமிருந்து பறித்த பணம் 21,500 ரூபாயை பறிமுதல் செய்ததுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story