கல்விநிதி 2,152 கோடி விடுவிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழக இடைநிலை மற்றும் (பதவி உயர்வு) பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் அறிக்கை

கல்விநிதி 2,152 கோடி விடுவிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழக இடைநிலை மற்றும் (பதவி உயர்வு) பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் அறிக்கை
X
கல்விநிதி 2,152 கோடி விடுவிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழக இடைநிலை மற்றும் (பதவி உயர்வு) பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் இளம்பருதி அறிக்கை வெளியிட்டுள்ளார் .
அரியலூர் பிப்.21- ஜெயங்கொண்டம் பிப்.22- தமிழகத்திற்கு கல்வி நிதி 2,152 கோடியை விடுவிக்க மறுக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதாக (தமிழக இடைநிலை மற்றும் (பதவி உயர்வு) பட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்)  மாநில பொதுச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் மன்றம் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் அதில் மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதிநிலை சுமார் 2152 கோடியை விடுவிக்க முடியாது எனக் கூறிய மத்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. பேரறிஞர் அண்ணா தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையையே தமிழ்நாடு கடைபிடிக்கும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து சட்டமாக்கினார். மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல வழிகளில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர்.2018 ஆம் ஆண்டு மூன்று கல்வி திட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சம்ரக்ஷா என்ற பெயரில் மத்திய அரசு 60 சதவீத நிதியும் மாநில அரசு 40 சதவீத நீதியும் ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றுவது என மத்திய அரசு அறிவித்தது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் பள்ளிகளை துவக்கி அதில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய 2152 கோடி நிதியை இதுவரை வழங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு நிதியை ஒதுக்க தீபம் மாநில அமைப்பு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மேலும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாத காரணத்தால் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான நிதியை ஒதுக்க முடியாது என கூறுவது சர்வாதிகார ஆட்சி மற்றும் ஒரு தலைப்பட்சமானது இதை வன்மையாக கண்டிக்கிறோம். இத்திட்டத்தில் இணைந்த ராஜஸ்தான் மாநிலம் தனது தாய் மொழியான ராஜஸ்தானியை இழந்து நிற்கிறது 80 சதவீதம் மொழியையே மறந்து போய் உள்ளது வேதனைக்குரியது இந்தியை திணித்து தமிழை அழித்துவிட துடிக்கும் மத்திய அரசு மிகப் பெரிய சதி செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம். மிகப்பெரிய போராட்டங்கள் நடப்பதற்கு முன் மத்திய அரசு இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒதுக்க தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் மேலும் இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் தீபம் அனைத்து ஆசிரியர் சங்கங்களோடு இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்த தயங்க மாட்டோம் என அறிக்கையின் மூலம் தமிழக இடைநிலை மற்றும் (பதவி உயர்வு) பட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்)  மாநில பொதுச் செயலாளர் இளம்பருதி கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்..
Next Story