தீரன் சின்னமலையின் 219 வது நினைவு தினம் அதிமுக சார்பில் மேலப்பாளையத்தில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பொள்ளாச்சி ஜெயராமன் 

காங்கேயம் மேலப்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தீரன் சின்னமலையின் 219 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜர் தலைமையில் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் திருவருடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தீர்த்தகிரி என்ற இயற்பெயர்  சின்னமலை என மாற்றம் அடைந்ததற்கு சில வரலாறுகள் கூறப்படுகின்றது. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த நேரம் மைசூர் அரசால் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப்பணத்தை கொண்டு சென்ற தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்ன மலை பறித்ததாக சொல் எனக்கு கூறினாராம். அன்றிலிருந்து தீர்த்தகிரி சின்னமலை என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது . அரச்சலூர் அருகே ஓடா நிலையில் கோட்டை கட்டி சின்னமலை பிரிட்டிஷார் எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க தொடங்கினார். சிலம்பம் வாள் வீச்சு என தன் கற்றுத் தேர்ந்த தற்காப்பு கலைகள் மூலம் தன்னையும் படைத்தளபதி களையும் தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவாராம் சின்னமலை. 1802 ஆம் ஆண்டு நடந்த போரின் போது சின்னமலை அதிரடி சிலம்பாட்டம் குறித்து இன்றைக்கும் கொங்கு மண்டலத்தில் பேசுவதுண்டு. வீரத்தை சூழ்ச்சிகள் வீழ்த்துவது தானே வழக்கம் அதுதான்  தீரன் சின்னமலையின் வாழ்க்கையிலும் நடந்தது. சின்ன மலையை சிக்க வைக்க திட்டமிட்டு ஆங்கிலேய அரசு அவரின் சமையல்காரர் மூலம் வலை விரித்து இறுதியாக அவரது சகோதரர்களுடன் கைது செய்யப்பட்டார் தீரன் சின்னமலை. எந்த சங்ககிரியில் தனது முதல் வேட்டையை சின்னமலை தொடங்கினாரோ அதே சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீரன் சின்னமலை. 1805 ஆம் ஆண்டு ஆடி 18ம் நாள் தூக்கிலிடப்பட்டார். பெரும்படையுடன் செல்வாக்குடன் வலம் வந்து ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையை கடைசி வரை நேரடியாக போரிட்டு வெல்ல முடியவில்லை என்பதை வீரத்தமிழரின் வரலாறு அந்த வரலாற்றை போற்றும் வகையில் அவருடைய நினைவை போற்றும் வகையிலும், சுதந்திரத்திற்காக போராடிய மாவீரனை போற்றும் வகையிலும் அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நினைவு நாளில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் ஒன்றிய செயலாளர் ஆன என். எஸ்.என். நடராஜ் தலைமையில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற துணை தலைவரும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் தீரன் சின்னமலையின் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தீரன் சின்னமலை அவர்கள் போருக்கு செல்லும் முன் வழிபடும் விநாயகர் கோவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு  சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் எம்.பி. சிவசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் , வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கேயம்  ஒன்றிய,நகர அதிமுக கழக நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது : அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி மேலப்பாளையம் கிராமத்தில் மாவீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வந்துள்ளதாகவும் தெரிவித்தார், பின்னர் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் மிகப்பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டு 500க்கும் மேற்பட்டோர் தன்னுடைய இன்னுயிரை இழந்து இருக்கின்றனர். இன்றைக்கு அனாதையாகி தவித்துக் கொண்டுள்ளனர். இது தமிழகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் தமிழகத்தினுடைய பல பகுதிகளில் இயற்கைக்கு விரோதமாக கல்குவாரிகள், கிரவல் மண், மணல் அள்ளுவது கட்டுக்கடங்காத இயற்கை வளங்கள் ஆளுங்கட்சியின் உறுதுணையோடு நடைபெறுவதாக தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் எங்கும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தமிழகம் கேரளத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இங்கேயும் இயற்கை பேரிடர்கள் வந்துவிடாமல் காக்க வேண்டும் என்றார். கனிமவள கடத்தல்  பொள்ளாச்சி, மதுக்கரை , உடுமலைப் பேட்டை, பழனி போன்ற பகுதியில் இருந்து கேரளாவிற்கு கல், மணல்,கிராவல் மண் ஆகியவை கடத்தப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இங்கேயும் மிகப்பெரிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட சூழ்நிலைகள் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் அவை இயற்கை பேரிடர்கள் அல்ல செயற்கை பேரிடர்கள் என தெரிவித்தார். மேலும் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலத்தில் தமிழக மக்கள் மீது அநியாயமாக அக்கிரமாக மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை மு.க. ஸ்டாலின் அவர்கள் உயர்த்தி இருக்கிறார். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இதுபோல் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டண பில்லை தொட்டால் ஷாக் அடிக்குது என கூறினார். ஆனால் தற்போது ஸ்டாலின்  மின் கட்டணத்தை மூன்று முறை உயர்த்தி உள்ளது சிறு,குறு தொழில்கள் மற்றும் பெருந் தொழில்கள் அழிந்து போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற தொழிற்சாலைகள் எல்லாம் மூடிவிட்டு அண்டை மாநிலங்களுக்கு தாவிச் சென்று கொண்டுள்ளனர். தொழில் வளம் அழிந்து கொண்டு உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தொழில்துறையிலே மிகச் சிறந்த மாவட்டங்கள். இந்த இரண்டு மாவட்டங்களும் இந்தியாவிற்கு வழிகாட்டுகின்ற குட்டி ஜப்பான் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்த தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. இவைகளை தவிர்க்க வேண்டும் என்றால் உடனடியாக முதலமைச்சர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொழில்களே காப்பதற்கான ஆராய்ச்சி செய்ய வேண்டும். அமெரிக்காவில் இருந்து இங்கு கொண்டு வந்து புதிய தொழிலை சேர்ப்பதைவிட உள்ளூரிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொழில்களை காக்க வேண்டிய வேலையில் முதலமைச்சர் அவர்கள் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.
Next Story