வெறிநாய் கடித்து 22 பேர் பாதிப்பு

வெறிநாய் கடித்து 22 பேர் பாதிப்பு
பாதிப்பு
சின்னசேலம் அடுத்த வி.மாமந்துாரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தெருகூத்து நடந்தது. அப்போது இரவு 9 மணிக்கு வெறிபிடித்த தெருநாய் ஒன்று அதே ஊரைச் சேர்ந்த சித்ரா,20; லட்சுமணன்,13; பாப்பா,60, லட்சுமி,65; அஜய்.15, சின்னதுரை,30; உள்ளிட்ட 11 பேரை கடித்துள்ளது. உடன் அனைவரையும் நைனார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து செல்லப்பட்டு தடுப்பூசி போட்டு, 6 பேர் மேல்சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வி.மாமந்துார் அருகே உள்ள கடலுார் மாவட்டம் பனையந்துார் கிராமத்தில் புகுந்த வெறிநாய் அங்கு காலை நேரத்தில் தெருவில் இருந்த யாமினி,8; யோகேஸ்வரி,7; ஹரிஷ்,7, புகர்ஷ்,10; காவ்யா,8; வெங்கடேசஷ்,38; அழகப்பன்,80; வல்லரசு,23; முத்தழம்மாள்,75; ரகிமாபிவி,50; உள்ளிட்ட 11 பேரை கடித்துள்ளது. உடன் அனைவரையும் மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தடுப்பூசி போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story