சேலத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.22 லட்சம் மோசடி

X
சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் ரூ.100 முதல் ரூ.1,000 வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கிய போது அவர்கள் பெரும்பாலானவர்களுக்கு தீபாவளி பலகாரம் கொடுக்கவில்லை. இதையடுத்து பணம் கட்டி ஏமாந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் தீபாவளி சீட்டு நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.22 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் உள்பட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

