உயர்நீத்த 22 மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

X
திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவின் ஸ்டாலின் அரசினால் தங்கள் இன்னுயிரை இழந்த 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. நீட் தேர்வு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் இருந்தபோது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு சட்டம் இயற்றப்பட்டது இதற்கு திமுக தான் முதற்காரணம் அதே போல் கச்சத்தீவும் முதல்வர் கருணாநிதி இருந்தபோது கையொப்பம் இடப்பட்டது தற்போது கச்சத்தீவை மீட்பதாக நாடகம் ஆடி வருகின்றனர் ஒவ்வொரு முறையும் ஒரு சட்டம் இயற்றுவதற்கு திமுக தான் காரணம். மக்களின் மறதியை காரணமாக வைத்து பித்தலாட்ட ஆட்சியை நடத்தி வருகிறது என கண்டன உரையாற்றினார் இதனைத் தொடர்ந்து 22 உயிர் நீத்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் மருதராஜ் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர் வி என் கண்ணன் திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பணி நிர்வாகிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story

