மேற்கு தாலுகா அலுவலகத்தில் வருகிற 22-ல் ஜமாபந்தி

மேற்கு தாலுகா அலுவலகத்தில் வருகிற 22-ல் ஜமாபந்தி
X
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் வருகிற 22-ல் ஜமாபந்தி
திண்டுக்கல்லில் 22 ஆம் தேதி வியாழக்கிழமை திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, கொத்தப்புள்ளி, சில்வார்பட்டி, அழகுபட்டி, கே.புதுக்கோட்டை, குருநாதநாயக்கனூர், சுள்ளெறும்பு போன்ற ஊர்களிலும், 23- ந் தேதி வெள்ளிக்கிழமை பழங்கானுத்து, நீல மலைக்கோட்டை, கோடல் வாவி, காமாட்சிபுரம், தெத்துப்பட்டி, சிரங்காடு, தாந்தோணிமலை, கன்னிவாடி மலை (வடக்கு)போன்ற ஊர்களிலும், 27- ந் தேதிசெவ்வாய்க்கிழமை ஆடலூர் பன்றிமலை சத்திரப்பட்டி, பழைய கன்னிவாடி, கசவனம்பட்டி, சிந்தலக்குண்டு, தாமரைக்குளம் போன்ற ஊர்களிலும், 28-ஆம் தேதி புதன்கிழமை அகரம், தாடிக்கொம்பு, அணைப்பட்டி, பள்ளப்பட்டி, குரும்பபட்டி, செட்டி நாயக்கன்பட்டி, அலக்குவார்பட்டி, சீலப்பாடி போன்ற ஊர்களிலும் ஜமாபந்தி நடைபெறும். அந்தந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரான மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலரிடம் நேரடியாக மனுக்களை கொடுத்து தீர்வு பெற்று செல்லுமாறு வருவாய்த்துறை (மேற்கு) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story