கதண்டு கடித்து 22 பேர் காயம் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு!

X
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்தவர் ராமு (எ) ராமசாமி (70). இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இடு காட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது கொள்ளிச் சட்டியில் இருந்து எழுந்த புகை காரணமாக அங்கிருந்த ஆலமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து துரத்தி கடித்தன. இதனால் உறவினர்கள் அதிர்ச் சியடைந்து அங்கிருந்து சிதறி ஓடினர். கதண்டு கடித் ததில் சேகர்(51), ஜெகதீசன் (59), செல்வராஜ் (77), கண் ணன்(50), சிவபாலன்(43) உட்பட 22 பேர் காயமடைந்த னர். இவர்கள் உடனடியாக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் கண்ணன் மட்டும் சிகிச்சை பெற்று வரு கிறார். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இதுதவிர, 3 பேர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
Next Story

