மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
X
மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியலூர், ஜூலை.1- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து பெற்ற 504 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக அவர், தாட்கோ சார்பில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் நலத்திட்ட உதவியாக 1 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.6,000 மதிப்பில் மகப்பேறு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.1,000 ஓய்வூதியமாகவும், 19 பயனாளிகளுக்கு ரூ.31,500 மதிப்பில் கல்வி உதவித்தொகையும் வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் எம்.உமா மகேஸ்வரி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story