ஆலங்காயம் போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை! திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை! திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேந்திரன் (32) என்பவர் வெள்ளக்குட்டை பகுதியைச் சார்ந்த பெருமாள் என்பவரின் மகளை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் கடந்த 21-03-2019ம் ஆண்டு பெண்ணைக் காணவில்லை என ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.அதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் மாவட்ட அமர்வு நீதிபதி மீனாகுமாரி ராஜேந்திரனுக்கு 22 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் மைனர் பெண்ணை கடத்தியதற்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும் இரண்டாயிரம் அபராத தொகை கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை. மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் தண்டனை மற்றும் 10ஆயிரம் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞராக சரவணன் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

